தென்கொரியாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!! செயல்பாடுகளை நிறுத்துமாறு உத்தரவு!!

தென்கொரியாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!! செயல்பாடுகளை நிறுத்துமாறு உத்தரவு!!

தென் கொரியாவில் பட்டியலிடப்படாத பேட்டரி தயாரிப்பு நிறுவனத்தில் Aricell இல் திங்கட்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. அதில் 23 பேர் பலியாகினர்.அதைத்தொடர்ந்து தொழிற்சாலை வேலைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு லித்தியம் பேட்டரி தயாரிப்பாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அவர்கள் தொழில்துறை பாதுகாப்பு சட்டங்களை மீறியதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

கடுமையான சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தி வந்தாலும் ஒவ்வொரு வருடமும் தென்கொரியாவில் டஜன் கணக்கான ஊழியர்கள் விபத்துகளில் உயிரிழந்து வருகின்றனர்.

 Aricell அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தலைப்புகள் குறித்த தகவல்கள் வெளியிடவில்லை.

மேலும் 2022 தொழில்துறை பாதுகாப்பு குறியீட்டை மீறினால் மேலும் விபத்துக்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.

பலியானவர்களில் மூன்று பேர் தென் கொரியர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் 17 பேர் சீனர்கள் என்றும் தீயினால் உடல் மோசமாகி கருகி உள்ளதால் மற்றவர்களை அடையாளம் காணப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பதை புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

 Aricell நிறுவனம் 2020 -ஆம் ஆண்டு தொடங்கியது.

அங்கு ஊழியர்கள் 48 முழுநேர வேலை செய்து வந்தனர்.