சிங்கப்பூர் உணவு அமைப்பு இறைச்சி, முட்டை வர்த்தகர்களுக்கு ஓர் அறிக்கையை அனுப்பியுள்ளது.
பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து கோழி மற்றும் வாத்துகளை இறக்குமதி செய்வதை சிங்கப்பூர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்தது.
H5N1 பறவை காய்ச்சல் ஜப்பான்,அமெரிக்கா,கனடா,பிரான்ஸ்,பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்து சமைக்கப்படாத கோழி மற்றும் வாத்து இறக்குமதிக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தது.
அந்த அறிக்கையில் வெப்ப பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு தடை இல்லை என்றும் கூறியுள்ளது.
உலக முழுவதும் கடந்த பல ஆண்டுகளில் சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமான கோழி மற்றும் வாத்துகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்துள்ளன.