சைனாடவுனில் மூதாட்டி மீது மோதிய டாக்ஸி!!

சைனாடவுனில் மூதாட்டி மீது மோதிய டாக்ஸி!!

சிங்கப்பூர் : சைனாடவுனில் 71 வயது பெண் பாதசாரி மீது ComfortDelGro டாக்ஸி மோதியது.

இந்த விபத்தில் காயமடைந்த மூதாட்டியை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக 8 World செய்தித்தளம் வெளியிட்டது.

இச்சம்பவம் குறித்து ஜனவரி 3 ஆம் தேதி (நேற்று) மதியம் சுமார் 2.50 மணியளவில் தகவல் வந்ததாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.

65 வயது டாக்ஸி ஓட்டுநர் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக 8 World செய்தித்தளம் குறிப்பிட்டது.

அந்த மூதாட்டி பாதசாரி பாதையில் தரையில் விழுந்து கிடப்பதையும் ,அவருக்கு ஒரு நபர் உதவி செய்வதையும் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.