அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை...!!! சட்டவிரோத குடியேறிகள் 164 பேர் கைது...!!!
மலேசியாவின் ஜாலான் லொக் யூ பகுதியில் அமைந்துள்ள பொழுதுபோக்கு மையத்தில் 164 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு அதிகாரிகள் நேற்றிரவு (செப்டம்பர் 27) நிலையத்தில் திடீர் சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.
பல பெண்கள் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்றதில் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
நிலையத்தின் கழிப்பறைகள் மற்றும் கிடங்குகளில் சிலர் மறைந்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 21 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
பிடிபட்டவர்களில் 114 பேர் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள்,12 பேர் வியட்நாமை சேர்ந்தவர்கள், 27 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், 9 பேர் சீனாவை சேர்ந்தவர்கள் எனவும், மேலும் இரண்டு பேர் பிலிப்பைன்ஸ் மற்றும் லாவோசைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கோலாலம்பூர் குடிவரவுத் துறையின் தலைவர் கூறியபடி, நேற்று இரவு 11.45 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இன்று அதிகாலை 1.30 மணிக்கு முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here