சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ. சிங்கப்பூர் வட்டார வர்த்தக துறைமுகமாக இருந்ததை உலகளாவிய உற்பத்தி,வர்த்தக, நிதி நடுவமாக மாற்றி, அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கியதில் லீ யின் பங்கு மகத்தானது.
லீயின் நூறாவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 10 வெள்ளி நாணயம் வெளியிடப்படுகிறது.
அது குறித்த அறிவிப்பை சிங்கப்பூர் நாணய வாரியம் வெளியிட்டுள்ளது.
அவருடைய உறுதி,துணிச்சல், அயராத அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் குறிக்கும்.
நாணயம் அலுமினிய வெண்கலத்தில் அச்சிடப்பட்டுள்ளது. LKY100 நாணயம் பொன்னிறத்தில் இருக்கும்.
நாணயத்தின் விட்டம் 300 மில்லிமீட்டர்.
தற்போது புழக்கத்தில் இருக்கும் மூன்றாம் வரிசை நாணயங்களைவிட LKY100 நாணயம் பெரியது.
சிறப்பு நாணயத்தை உள்ளூர் கலைஞர் Weng Ziyan வடிவமைத்திருக்கிறார்.
இன்று முதல் அடுத்த மாதம் 9-ஆம் தேதி வரை LKY100 நாணயங்களைப் பெற இணையத் தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Read more: சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ வின் 100-வது பிறந்தநாளை நினைவுகூறும் சிறப்பு நாணயம் வெளியீடு!சிறப்பு நாணயங்களைப் பெறுவதற்கு சிங்கப்பூரர்களும்,நிரந்தரவாசிகளும் முன்பதிவு செய்யலாம்.