தாயின் கல்லறைக்குச் சென்று உறங்கும் மகன்…!!!

தாயின் கல்லறைக்குச் சென்று உறங்கும் மகன்...!!!

அம்மாவிடம் இருந்து விடைபெறும் எண்ணம் இல்லாமல் கல்லறை அருகே ஒருவர் படுத்திருக்கும் காட்சியானது நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது.

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பாங்கி பகுதியைச் சேர்ந்த அஸிம், இந்த ஆண்டு ஜூன் மாதம் தனது தாயை இழந்துள்ளார்.

துக்கத்தில் ஆழ்ந்திருந்த அவர் அடிக்கடி இடுகாட்டிற்குச் சென்று வருவது வழக்கமாக வைத்திருந்தார்.

சில சமயம் கையில் தேநீருடன் செல்வார்.

அவர் நீண்ட நேரம் தனது தாயின் கல்லறை அருகில் அமர்ந்திருப்பார்.

சில சமயம் அங்கேயே தூங்குவதற்கு கையில் பாயுடன் செல்வார்.

சில நாட்களாக அஸிமின் செயல்பாடுகளை கவனித்த சூ அகமது அவரைப் பற்றி முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

அஸிம் சமீபத்தில் காணாமல் போனதாகவும்,அவரது எப்படி உள்ளார் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

பல நெட்டிசன்கள் அஸிமின் பாசத்தைக் கண்டு நெகிழ்ந்தனர்.

“அப்படிப்பட்ட மகனைப் பெற்ற தாய் பாக்கியசாலி.”

“அவர் கல்லறையில் கிடப்பதைப் பார்க்கும்போது மனவேதனையாக இருக்கிறது” என்று பலர் கூறினர்.

அஸிம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தும் சில வீடியோக்களையும் டிக்டாக்கில் பதிவேற்றியுள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் பலர் அவரின் பாசத்தை கண்டு நெகிழ்ந்தனர்.

Follow us on : click here ⬇️