சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று தனது ஊழியருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி!!
சிங்கப்பூர்:உலகெங்கிலும் உள்ள எத்தனையோ தொழிலாளர்கள் தனது குடும்பத்திற்காக வேறொரு நாட்டில் தங்கி இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கின்றனர். அவர்கள் தான் வேலை செய்யும் முதலாளிக்கு மிகவும் விசுவாசமாகவும் அர்ப்பணிப்பு உணர்வுகளுடனும் வேலை பார்த்து கொடுக்கின்றனர்.அவர்களும் தங்களின் வேலையாட்களை மகிழ்விக்கும் பொருட்டு அவ்வபோது அன்பு பரிசளித்து மகிழ்வதும் உண்டு. அதுபோன்ற ஒரு நெகிழ்ச்சி சம்பவம் தான் சிங்கப்பூரில் நடைபெற்று உள்ளது.
சிங்கப்பூரின் Pollisum Engineering என்னும் நிறுவனமானது சமீபத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
அந்நிகழ்ச்சியில் தனது ஊழியர் சுன் கெவுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
Pollisum Engineering, சுன் கெவை சீனாவில் இருக்கும் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைக்க ஏற்பாடு செய்தது. அதனால் அவர்களை சீனாவில் இருந்து வரவழைத்த அந்நிறுவனம் அவரின் குடும்ப உறுப்பினர்களை ஹாலிடே இன் ஹோட்டலில் தங்குவதற்கு நிறுவனம் ஏற்பாடு செய்தது.
36 வயதுடைய சுன் கெ சீனா நாட்டைச் சேர்ந்தவர்.
Pollisum Engineering நிறுவனத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். Pollisum Engineering தனது 40வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்தோனேசியாவின் Batam இல் ஒரு சிறப்பு நிகழ்வை நடத்தியது. அந்நிகழ்வில் தந்தையர் தின அதிர்ஷ்ட குழுக்கள் நடைபெற்றது.
அதில் சுன் கெ வெற்றி பெற்றார். அவரது குடும்பம் சீனாவில் இருந்து வந்தது என்பது அவருக்கு முதலில் தெரியாது. நிகழ்வின் போது அவரது மனைவி 2 வயது மகளுடன் வந்ததைக் கண்டதும், சுன் உணர்ச்சிவசப்பட்டு குடும்பத்தினரை கட்டிப்பிடித்தார். பார்ப்பவரின் உள்ளத்தை நெகிழ வைக்கும் அந்த வீடியோவை Pollisum Engineering நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சுன் கெவின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், நிறுவனம் திட்டமிட்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
Follow us on : click here