ஒடிசாவில் கரையைக் கடந்த தீவிர புயல்!!

ஒடிசாவில் கரையைக் கடந்த தீவிர புயல்!!

Dana புயல் இன்று அதிகாலை ஒடிசா கடற்கரை அருகே கரையைக் கடந்தது.மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையைக் கடந்தது.இதனால் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

ஒடிசாவின் அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்திலும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மிகவும் கடுமையான புயலாக Dana வகைப்படுத்தப்பட்டது.

ஒடிசாவில் 5.84 லட்சம் பேர் பாதுக்கப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் ஒரு சில பகுதிகளில் உள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இரு மாநிலங்களின் விமானப் போக்குவரத்து நிலையங்கள் அதன் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

டானா புயல் ஒடிசா மாநிலத்தின் வட கடலோர பகுதியில் 9 மணி நேரத்தில் முழுவதுமாக கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


பலத்த காற்று வீசியதால் மரங்கள் முறிந்துள்ளன.

 

Follow us on : click here ⬇️

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilansg