Singapore News in Tamil

சிங்கப்பூரில் கண்களுக்கு விருந்தளிக்க வரும் கடல் பூங்கா!

அடுத்த ஆண்டு சிங்கப்பூரின் Sisters தீவுகளில் உள்ள கடல் பூங்கா மீண்டும் திறக்கப்பட உள்ளது.

இன்னும் கூடுதலான அம்சங்கள் சேர்க்கப்படும்.பொதுமக்கள் மேலும் பல்லுயிரினங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள அது உதவும்.

அது பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்.

ஆசிய- பசிபிக் பவளப்பாறை கருத்தரங்கில் அந்த விவரங்களைப் பற்றி தேசிய வளர்ச்சி அமைச்சர் Desmond Lee வெளியிட்டார்.

கடல் பூங்காவில் கரையோரக் காட்டுப் பாதை, சதுப்புநிலக் குளம்,பறவைகளை ரசிப்பதற்கான பார்வையாளர் தளம் ஆகியவை அமைக்கப்படும்.

கப்பல் நிறுவனமான Ocean Network Express மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனமான Singtel ஆகியவை ஒரு மில்லியன் வெள்ளி வழங்கியிருக்கின்றனர்.

கடல் வகுப்பறையை 5G தொழில்நுட்பத்தைக் கொண்டு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் அடுத்த பத்தாண்டுகளில் 100,000 பவளப்பாறைகளை நடவும் திட்டமிட்டுள்ளது.