சிங்கப்பூரில் உள்ள மரீனா ஈஸ்ட் டிரைவ் கடற்கரையில் காணப்பட்ட உலகின் மிகப்பெரிய முதலை இனங்களில் ஒன்றான உப்புநீர் முதலை…..

செவ்வாய்க்கிழமை அன்று கிட்டத்தட்ட மூன்று மீட்டர் நீளமுள்ள Estuarine என்று அழைக்கப்படும் உப்பு நீர் முதலை, மரீனா ஈஸ்ட் டிரைவ் கடற்கரையில் தென்பட்டது.பின்னர் அகற்றப்பட்டது.

உலகின் மிகப்பெரிய முதலை இனங்களில் ஒன்றான இந்த உப்பு நீர் முதலை 5 மீட்டருக்கும் அதிகமான நீளம் வரை வளரக்கூடியது.

இந்த வகை முதலைகள் பொதுவாக உப்பு நீர் மற்றும் நன்னீரில் வாழும் என்றும், தண்ணீர் அல்லது சேற்று பரப்பில் காணப்படும் என்றும் தெரிவித்தனர்.

வேறு இடத்திற்கு மாற்றுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முதலையை கருணை கொலை செய்யப் போவதாக தேசிய பூங்கா வாரியம் தெரிவித்தது.

மேலும் முதலைகள் பிடிபட்ட இடத்திற்கே திரும்பும் அபாயம் இருப்பதால் அதை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது என்று தேசிய பூங்கா வாரியத்தின் இயக்குனர் தெரிவித்தார்.

பொதுமக்கள் முதலைகளை பார்த்தால் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், அவற்றிடம் இருந்து மெதுவாக பின்வாங்க வேண்டும் என்றும் தேசிய பூங்கா வாரியம் கூறியது.

மேலும் முதலைகளை அணுகவோ அல்லது அவற்றிற்கு உணவளிக்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தியது.