அந்தரத்தில் பாதியில் நின்ற ரோலர் கோஸ்டர்!! ஊசலாடிய 12 உயிர்கள்!!

அந்தரத்தில் பாதியில் நின்ற ரோலர் கோஸ்டர்!! ஊசலாடிய 12 உயிர்கள்!!

ஹாங்காங் டிஸ்னி லேண்டில் ரோலர் கோஸ்டர் பாதியில் நின்றது.

அதில் மாட்டிக்கொண்ட 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பிப்ரவரி 7ஆம் தேதியன்று பிற்பகல் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு மாலை 3.16 மணியளவில் அழைப்பு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், மாலை 4.16 மணியளவில் ரோலர் கோஸ்டரில் சிக்கிக் கொண்டிருந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர்.

பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர்கள் கூறினர்.