தென்கொரியாவில் 40 வயதுடைய நபர் ரோபோட்டால் நசுக்கப்பட்டு உயிரிழந்தார்.
அவர் South Gyeongsang மாநிலத்தில் உள்ள ரோபோடிக்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
அவர் விநியோக மையத்தில் உள்ள ரோபோவின் சென்சார் செயல்பாடுகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
அப்போது பெட்டிகளை கையாளும் கருவி, அவரை பெட்டி என்று நினைத்து கன்வேயர் பெல்ட்டின் மீது தள்ளியது. அவரது உடலும் முகமும் நசுக்கப்பட்டது என்று Yonhap செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அவர் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது.
ரோபோ தவறாக அடையாளம் கண்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.