சிங்கப்பூரில் உங்கள் சம்பளத்தை அதிகரிக்க ஓர் அரிய வாய்ப்பு!! இந்த பதிவு உங்களுக்கானது!!

சிங்கப்பூரில் உங்கள் சம்பளத்தை அதிகரிக்க ஓர் அரிய வாய்ப்பு!! இந்த பதிவு உங்களுக்கானது!!

சிங்கப்பூரில் உங்கள் சம்பளத்தை அதிகரிக்க ஓர் அரிய வாய்ப்பு!!

சிங்கப்பூரில் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா அப்படியென்றால் இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்:

நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய சிங்கப்பூரில் எந்த கோர்ஸ் படித்தால் அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை பற்றி அறியலாம்.


முதன்முதலில் சிங்கப்பூர் செல்லும்போது நல்ல சம்பளத்தில்தான் செல்வீர்கள். இன்னும் சரியான வழியில் உங்களை இம்ப்ரூவ்மெண்ட் செய்தால் சம்பளம் படிப்படியாக அதிகமாகலாம். நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு அதிகம் பெறலாம்.

அதற்கு நீங்கள் செய்யவேண்டியது: வேலை நேரம் தவிர மற்ற நாட்களில் ஏதேனும் ஓர் course படிக்கலாம். சிறிய கோர்ஸ் முதல் அதிக பணம் செலுத்தி படிக்கக்கூடிய டிகிரி, டிப்ளமோ கோர்ஸ் அனைத்தும் இருக்கிறது.

சிங்கப்பூர் செல்லும்போது ஜெனரல் வொர்க்கர் ஆக இருக்கும் நீங்கள் சூப்பர்வைசர்,ஆபிசர் வரை பதவி உயர்வு அடைய நிறைய கோர்ஸ் உள்ளது.

நீங்கள் work pass இல் சென்றால் கூட S pass,E pass அளவிற்கு உங்களை டெவலப் பண்ண முடியும். இதில் எந்த கோர்ஸ் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை தெரிந்துகொண்டு அதன்பின் கோர்ஸை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

நீங்கள் சிங்கப்பூர் சென்றவுடனே கோர்ஸ் படிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் சிங்கப்பூர் செல்வதற்கு சில லட்சம் கட்டிதான் சென்றிருப்பீர்கள்.முதலில் நீங்கள் பெறும் 1முதல் 6 மாத காலம் சம்பளத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்து குடும்பத்தாருக்கு நம்பிக்கை கொடுங்கள்.பிறகு நீங்கள் எந்த ஃபீல்டில் இருக்கின்றீரோ அந்த பீல்ட்க்கான கோர்ஸை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

உதாரணமாக,நீங்கள் சேப்டி சூப்பர்வைசர் ஆக இருக்க விரும்பினால் அதற்கான கோர்ஸ்,அதாவது சேப்டி சூப்பர்வைசர், ஆபிசர், சேப்டி coordinator போன்ற கோர்ஸை படிக்கலாம்.அதனால் கோர்ஸ்க்கு செலுத்தும் பணமும் வீணாகாது.

சுலபமாக படிக்ககூடிய 5 கோர்ஸ்கள் :start level course:

(1)BOOM LIFT OPERATOR:

இந்தியாவில் படித்த boom lift operator க்கான certificate வைத்து இந்தியாவில் மட்டுமே வேலை பார்க்க முடியும்.அதனை வைத்து சிங்கப்பூரில் வேலை பார்க்க இயலாது. சிங்கப்பூர் ரூல்ஸ் படி சிங்கப்பூரில் கோர்ஸ் முடித்து exam எழுதினால் மட்டுமே உங்களால் சூப்பர்வைசர்,boom lift operator ஆக முடியும்.

Coaching days: 2


Amount: $250 -$300 டாலர்


Boom lift மிகவும் உயரமான இடத்தில் பயன்படுத்தப்படும்.
இதை எப்படி இயக்குவது பற்றி தெரிந்தவர்கள் மட்டும் தான் operate பண்ண முடியும்.

(2)BASIC TRAFFIC CONTROLLER:


Traffic management control : இந்த கோர்ஸ் படித்தால் நல்ல சம்பளம் கிடைக்கும். இது மிகவும் சிறந்த கோர்ஸ்.

Coaching days: 1-2


Amount : $250 டாலர்

(3)FIRST AID COURSE:

Coaching days: 1


Amount. $305 டாலர்.

(4) SUPERVISOR LEVEL COURSE:


லிஃப்ட் இல் கொண்டு செல்ல கூடிய பொருட்கள் சரியான அளவுகளில் செல்லவும்,மெசினுக்கும்
வேலையாட்களுக்கும் இடையே distance maintain
பண்ணக்கூடியவர்.

Amount:$250-$300 டாலர்.

(5)RIGGER SIGNAL MAN:


ஒரு பொருளை
தூக்கவோ, நகர்த்தவோ
சிக்னல் கொடுப்பது,விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கும்,machine operator க்கு signal கொடுப்பது RIGGER SIGNAL MAN WORK ஆகும்.

Coaching days :3-4 days


Amount: $250 -$300 டாலர்.

நீங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கோச்சிங் சென் டரில் படிக்கலாம்.
எவர் சேவ் அகாடமி போன்ற பல சென்டர்களில் படிக்கலாம் . ஓவர் டைம் இல்லாத நாட்களில் மாலை நேர வகுப்புகள் இயங்கும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் இயங்கும்.