தள்ளுபடியில் விமான டிக்கெட் கிடைக்கும் ஓர் அரிய வாய்ப்பு…. யாரும் இதை தவற விடாதீர்கள்…..

சன்டெக் சிங்கப்பூர் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 71 இடங்களுக்கு 170,000-க்கும் மேற்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கு தள்ளுபடியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதேபோல் Scoot விமான நிறுவனம் 50 இடங்களுக்கு 200,000 டிக்கெட்டுகளை தள்ளுபடியில் வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் தள்ளுபடி டிக்கெட்டுகள் 2024ல் ஜனவரி முதல் செப்டம்பர் வரை பயணிக்கும் விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

Scoot-ன் தள்ளுபடி டிக்கெட்டுகள் 2023 நவம்பர் முதல் 2024 அக்டோபர் வரை பயணிக்கும் ஒரு வழி விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மேலும் கண்காட்சியில் டிக்கெட்டுகளை பெறுபவர்கள் தினசரி அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் பரிசுகளை பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

கண்காட்சிக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் ஆன்லைனில் பெறலாம்.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் Scoot இணையதளங்களில் நவம்பர் 3 முதல் 16 வரை இந்த தள்ளுபடி டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம்.

Time To Fly கண்காட்சி Suntec சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் நடைபெறும்.அது நவம்பர் 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.