சிங்கப்பூரில் பெண்களை குறி வைத்து தாக்கும் அரிய நோய்!! விழிப்புணர்வுடன் இருக்க அறிவுரை!!

சிங்கப்பூரில் பெண்களை குறி வைத்து தாக்கும் அரிய நோய்!! விழிப்புணர்வுடன் இருக்க அறிவுரை!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஹார்ட் ஃபவுண்டேஷன் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

கார்டியோவாஸ்குலர் என்னும் இருதய நோயானது சிங்கப்பூரில் உள்ள பெண்களை குறி வைப்பதில் முதலிடத்தில் உள்ளது. மேலும் அந்நோய் பற்றி பத்தில் ஒரு பெண்களுக்கு மட்டுமே தெரிந்திருப்பதாக அந்நிறுவனம் கூறியது.

இந்த ஆய்வில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் இதய நோய் ஆண்களை அதிகம் தாக்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மார்பக புற்றுநோயால் அதிகளவில் பெண்கள் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதய நோய் என்பது மார்பகப் புற்றுநோயை விட ஆறு மடங்கு கொடியது.

சுறுசுறுப்பாக செயல்பட்டால் நோய் தாக்கும் அபாயத்தை குறைக்கலாம் என
தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண்கள் வாரத்திற்கு குறைந்தது சுமார் இரண்டரை மணி நேரமாவது உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்க வேண்டும்.

ஆனால் 86 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் அந்த இலக்கை அடைய போராடுவதாக கூறப்படுகிறது.

Follow us on : click here 👇👇

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg