பாரம்பரிய வர்த்தகம் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு உதவும் திட்டம்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பாரம்பரிய வர்த்தகம் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளைத் துடிப்புடன் வைத்திருக்க புதிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கம்போங் கிளாம், சைனா டவுன், லிட்டில் இந்தியா போன்ற இடங்களில் உள்ள பாரம்பரிய வணிகங்கள் சவால்களை சமாளிக்க நிறுவனங்களுக்கு உதவுகின்றன.
கம்போங் கிளாமில் நோன்பு பெருநாளுக்காக 35 நாட்கள் நீடிக்கும் வருடாந்திரச்சந்தை நடைபெறும் வேளையில் இந்த புதிய முயற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய பணிக்குழு, பாரம்பரிய திறன்களை வளர்ப்பது மற்றும் வணிகங்களை எப்படி உருமாற்றுவது என்பது குறித்தும் ஆராயும்.
சிங்கப்பூரின் கலாச்சாரத்தை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல பாரம்பரிய வர்த்தகத்தைப் பாதுகாப்பது முக்கியம் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.
மேலும் எதிர்காலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் சமூகத் தலைவர்கள் உள்ளூர் சங்கங்களுடன் ஈடுபடுவார்கள் என்று திரு.லீ கூறினார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan