நோயாளிகளுக்கு சிகிச்சையுடன் கூடிய ஆலோசனை வழங்கும் திட்டம்...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நாள்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிகிச்சையுடன் ஆலோசனை வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைத் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை 2022 இல் தொடங்கியது.
இது 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டது.
பெரியவர்களுக்கான திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
9 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் ஒரு மணிநேரம் நீடித்த நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.
நடவடிக்கையில் ஆலோசனை, கலை வழி சிகிச்சை, பெற்றோருக்குரிய உத்திகள் போன்றவை அடங்கும்.
ஒவ்வொரு குழுவும் பத்து முறை நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்.
கட்டணத்தில் 20 சதவீதம் செலுத்தினால் போதும்.
மீதமுள்ளவை EtonHouse சமூக நிதியினால் ஆதரவு அளிக்கப்படும்.
இத்திட்டம் 2026 ஆண்டு வரை வரை தொடரும் என்று கூறப்படுகிறது.
இத்திட்டத்தில் 12 குடும்பங்கள் பங்கேற்கலாம்.
முதியோர்களுக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கையானது எடுக்கப்பட்டு வருகிறது.
பெற்றோரின் ஆரோக்கியத்தைக் கையாள்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg