பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களின் சாதனையை கொண்டாடும் நிகழ்ச்சி…!!

பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களின் சாதனையை கொண்டாடும் நிகழ்ச்சி...!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மாற்றுத்திறனாளி ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு விருது வழங்கும் விழா நேற்று மாலை (அக்டோபர் 15) நடைபெற்றது.

இதில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களான யிப் பின் சியு மற்றும் ஜெரலின் டான் ஆகியோர் அங்கீகாரம் பெற்றனர்.

பாரிஸ் விளையாட்டுப் போட்டியில் யிப் பின் சியூ நீச்சலில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.ஜெரலின் டான் போச்சாவில் சிங்கப்பூரின் முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அண்மையில் நடைபெற்ற பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் அவர்களின் சாதனைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலாசாரம், சமூகம் மற்றும் இளைஞர் ஆதரவு மூத்த நாடாளுமன்ற செயலாளர் எரிக் சுவா, மாற்றுத்திறனாளிகளின் வெற்றிகள் தான் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடு உலக அரங்கில் சாதனை படைத்துள்ளது என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியானது மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சமூகத்தில் தனக்கென்ற அடையாளத்தை நிலைநாட்டி தன்னம்பிக்கை கொண்டவர்களாய் இருப்பார்கள் என்று கூறப்பட்டது.

மேலும் விளையாட்டு அவர்களை ஆக்கபூர்வமாக வைத்துக் கொள்ளவும்,விளையாட்டில் மீதான ஈடுபாடு மற்றும் ஆர்வத்தை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.