சிங்கப்பூரில் பெண்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி!!
சிங்கப்பூர்: பெண்களை உலக அளவில் பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். ஆண்களுக்கு நிகர் பெண்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில் வேலை மற்றும் குடும்பம் என இரண்டையும் கவனித்துக் கொள்ளும் பெண்களுக்கு அதிக ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கேட்டுக் கொண்டார்.
பெண்களினால் சமுதாயம் நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தாலும்,அவற்றை எளிதாக்குவதற்கான பாதையை கண்டறிய வேண்டும் என்று கூறினார்.
மேலும் அனைவரும் சரியான சமநிலையைக் கண்டறிவதன் மூலம் சமூகத்தில் முன்னேற முடியும் என குமாரி இந்திராணி குறிப்பிட்டுள்ளார்.
பெண்களை மேம்படுத்துவதற்காக சிங்கப்பூர் இந்திய வளர்ச்சி சங்கம் (SINDA) ஏற்பாடு செய்திருந்த ShineSpire கருத்தரங்கில் குமாரி இந்திராணி பேசினார்.
250 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்திய பெண்கள் கலந்து கொண்டனர்.
பேச்சாளர்கள் தங்கள் தனிப்பட்ட, தொழில் சார்ந்த அனுபவங்களையும் சாதனைகளையும் பகிர்ந்து கொண்டதோடு பெண்கள் சமூகத்தில் முன்னேறுவதற்கான ஒரு பலமான அடித்தளத்தையும் அந்நிகிழ்ச்சியானது உருவாக்கித் தந்தது.
மேலும் 22 முன்னணி தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெண்களின் மேம்பாட்டுக்காக மேலும் பல திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக சிண்டா தெரிவித்தார்.
Follow us on : click here