நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பிரபல யூடியூபரின் எடை இழப்பு வீடியோ வைரல்…!!!

நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பிரபல யூடியூபரின் எடை இழப்பு வீடியோ வைரல்...!!!

நிகோகாடோ அவகேடோ என்ற நபர் “முக்பாங்” எனப்படும் உணவு உட்கொள்ளும் வீடியோக்களை யூடியூப் இல் பதிவேற்றி பிரபலமானார்.

அவர் மிகுந்த உடல் பருமனான தோற்றத்தில் வீடியோக்களில் காட்சியளித்ததால் சில நெட்டிசன்கள் அவரது எடையை கேலி செய்தனர்.

ஆனால் அவர் அந்த கருத்துக்களை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார்.

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தாலும், அதை நெட்டிசன்களிடம் காட்டவில்லை.

அந்த காலகட்டத்தில் அவர் ஏற்கனவே பதிவு செய்த வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றினார்.

அந்த வீடியோக்களில் அவர் பருமனாக இருப்பார்.

ஆனால் 7 மாதங்களில் 114 கிலோ எடையை குறைத்தார்.

இம்மாதம் (செப்டம்பர்) 7ஆம் தேதி அவர் வெளியிட்ட வீடியோ இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அந்த வீடியோவில் அவர் திடீரென மிகவும் ஒல்லியாக காட்சியளித்தார்.

இதை கண்ட நெட்டிசன்கள் சிலர் இது மிகவும் ஆச்சரியமாகவும் நம்பமுடியாத வகையிலும் உள்ளதாக கூறியிருந்தனர்.

சிலர் அவரின் இந்த மாற்றத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Follow us on : click here ⬇️