சிங்கப்பூரில் தினமும் மஞ்சள் தொட்டிகளில் 300 க்கும் அதிகமான தேவைப்படாத ஜவுளிகள் நிறைகின்றது.
அவைகள் சேகரிக்கப்பட்டப்பின், பிரிக்கப்படுகிறது.
நல்ல நிலையில் இல்லாத ஜவுளிகளை மீண்டும் விற்பதற்காக அல்லது மறுபயனீடு செய்ய மலேசியாவுக்கு அனுப்பப்படுகிறது.
8 டன் ஜவுளிகளை கடந்த இரண்டு ஆண்டுகளில் மறுபயனீடு செய்ய முடிந்ததாக Cloop அமைப்பின் இணை நிறுவனர் Jasmine Tuan கூறினார்.
அவைகள் அதிகம் என்றாலும், தேசிய புள்ளிவிவரத்தைப் பார்க்கும்போது இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருப்பதாக கூறினார்.
தேசிய சுற்றுப்புற அமைப்பு அண்மைப் புள்ளிவிவர அறிக்கை ஒன்றை வெளியிட்டது.கடந்த ஆண்டு ஜவுளி கழிவுகளில் 2 விழுக்காடு ஜவுளி கழிவுகள் மட்டுமே மறுபயனீடு செய்யப்பட்டதாக குறிப்பிட்டது.
ஆனால், மொத்த கழிவு அதிகரித்துள்ளதாக கூறியது.
அவைகளை வெளிநாட்டுக்கு அனுப்பும் செலவு அதிகம். அதோடு, அவற்றின் மறுபயனீட்டு விகிதம் குறைவாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதனால், உள்ளூரிலேயே ஜவுளி மறுபயனீட்டு ஆலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு சோதனை முறையில் ஜவுளியை மறுபயனீடு செய்யும் ஆலை திறக்கப்படவிருக்கிறது.
அதனை Cloop நிறுவனம் வழி நடத்தும்.நிறுவனத்தின் இலக்கை அடைய தொழில்துறையின் கூடுதல் ஈடுபாடும் நிதியும் தேவை என்று சொன்னது.