ரயிலில் மின் சிகரெட்டைப் பயன்படுத்தியதாக நபர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனைச் சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.இது பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் கிழக்கு – மேற்கு ரயில் தடத்தில் நிகழ்ந்தது.
இந்த மாதம் பிப்ரவரி,14-ஆம் தேதி அந்த நபர் மின் சிகரெட்டைப் பயன்படுத்தும் காணொளி STOMP எனும் இணையப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அந்த காணொளியில் அவர் தரையில் அமர்ந்து கையில் மின் சிகரெட்டைப் பயன்படுத்திய காட்சி இருந்தது.
சீமேய் ரயில் நிலைய ஊழியர்களுக்கு ஆண் பயணி ஒருவர் மின் சிகரெட்டைப் பயன்படுத்துவதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதனை SMRT நிறுவனம் கூறியது.
அவரின் செயலைப் பதிவுகளில் பார்த்து உறுதி செய்தது. அதன்பின், காவல்துறையிடம் புகார் கொடுத்தது.
காவல்துறை உதவியுடன் மின் சிகரெட்டைப் பயன்படுத்திய 45 வயதுடைய நபர் அடையாளம் காணப்பட்டார்.
அவர் மின் சிகரெட்டைச் சாலையில் இருந்து எடுத்ததாகவும் அதனை அவர் வீசி விட்டதாக அவர் கூறியதாக ஆணையம் தெரிவித்தது.
அதன்பின் மேல் விசாரணைத் தொடர்ந்தது.அவர் சட்ட விரோதமாக மின் சிகரெட்டைப் பயன்படுத்தியதற்காக அபராதம் விதித்தது.
இந்த குற்றத்திற்காக அவருக்கு சுமார் 2,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.