சுமார் 150 க்கும் மேற்பட்டவர்களிடம் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நபர்!

சிங்கப்பூர் எப்படியாவது செல்ல வேண்டும் என்பது பலரது கனவு. அதனால் எப்படியாவது செல்ல வேண்டும் என்று பலரும் முயற்சித்து வருகின்றனர்.

இதுபோன்று பல கனவுகளுடன் இருப்பவர்களை சில போலி ஏஜெண்டுகள் ஏமாற்றி விடுகின்றனர்.

அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் இழுத்தடிப்பது அல்லது தலைமறைவாகி விடுவது என பல்வேறு முறையில் மோசடி செய்து வருகின்றனர்.

தற்போது அதேபோல் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரேம் என்பவர் சுமார் 150 க்கும் மேற்பட்டவர்களிடம் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 3 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார்.

தஞ்சாவூர், அரியலூர், தென்காசி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்தவர்களை பிரேம் ஏமாற்றி உள்ளார்.

கார் உதிரி பாகங்கள் விற்பனைக் கடையைப் பிரேம் நடத்தி வந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் இவருடைய கடைக்கு முன்பு நின்று முற்றுகைச் செய்துள்ளனர்.இதனால் பிரேம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து , காவல்துறை அவரை கைது செய்தது.