இணையதளத்தில் தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிமுகப்படுத்திக் கொண்ட நபர்..!!!

இணையதளத்தில் தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிமுகப்படுத்திக் கொண்ட நபர்..!!!

சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனக்குத் தானே போலி கைதாணையைத் தயாரித்த குற்றத்திற்காக
கைதாகியு ள்ளார்.

நவம்பர் 11 ஆம் தேதி, வாங் என்ற நபர் தனது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றி, படத்தில் உள்ள நபர் தேடப்படுவதாக பதிவிட்டுள்ளார்.

“தான் ஒரு நிறுவனத்திடம் இருந்து 30 மில்லியன் யுவென் (சுமார் 5.5 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள்) பணம் பறித்துள்ளேன்.

மேலும் என்னிடம் துப்பாக்கி உள்ளது.

என்னைக் கண்டுபிடித்தால் 30,000 யுவென் தருகிறேன்” என்று அந்த நபர் தனது பதிவில் எழுதினார்.

அந்த வீடியோவை பார்த்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.

சில மணி நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொண்ட தீவிர சோதனைக்கு பிறகு ஆயுதம் ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

அவர் எந்த நிறுவனத்திடமும் பணம் பறித்ததில்லை.

வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டதால் இவ்வாறு செய்ததாக வாங் கூறியது அதிகாரிகளை திடுக்கிட வைத்தது.