மது போதையில் மொபைலிட்டி ஸ்கூட்டரை வேகமாக ஓட்டி சென்று தம்பதியினர் மீது மோதி விபத்து ஏற்படுத்திய நபர்!!

சிங்கப்பூரைச் சேர்ந்த 57 வயதான Hui Sai Mun என்பவர் மது போதையில் தனது மொபைலிட்டி ஸ்கூட்டரில் வேகமாக சென்று ஒரு தம்பதியினர் மீது மோதியதில் அவர்கள் பலத்த காயமடைந்தனர்.

அவரின் இந்த குற்றத்திற்காக இரண்டு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் 51 வயதான New Ah Chew மற்றும் அவரது மனைவி Wei Xiaohui,42.

இந்த விபத்தில் Mr. New-க்கு எலும்பு முறிவு ஏற்பட்டது என்றும் அவரது மனைவிக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hui தனது செயலைக் குறித்து வருந்துவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.