மீண்டும் மீண்டும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்!! மீண்டும் சிறை!!

மீண்டும் மீண்டும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்!! மீண்டும் சிறை!!

சிங்கப்பூரில் பொது இடத்தில் கூச்சலை ஏற்படுத்தி,மக்களுக்கு தொல்லை கொடுத்து, தள்ளுவண்டி கடையிலிருந்து திருடியாதோடு மட்டுமல்லாமல் சண்டையிலும் ஈடுபட்டவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குற்றம் செய்து தண்டனையிலிருந்து வெளியே வந்த ஐந்து மாதங்களுக்குப்பின் மீண்டும் இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத் தொல்லை, திருட்டு, தகராறு போன்ற குற்றச்சாட்டுகள் முகமது ஹபீஸ் அயூப் மீது சுமத்தப்பட்டது. அவருடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.அவருக்கு ஆறு வார சிறை தண்டனையும் $2,800 அபராதமும் விதிக்கப்பட்டது.
ஏப்ரல் 16-ஆம் தேதி விதிக்கப்பட்டது.

தண்டனைக்கான அபராத தொகையை செலுத்த இயலாது என்றும் தன்னிடம் 70 சென்ட் மட்டுமே இருப்பதாக அவருடைய தரப்பில் முன்வைத்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மூன்று வாரங்கள் சிறை தண்டனை வழங்கப்படும்.

2021 ஆம் ஆண்டு திருடிய குற்றத்திற்காக நான்கு வாரங்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.மேலும் பொது தொல்லைக்காக $400 அபராதமும் விதிக்கப்பட்டது.

திருட்டு சம்பவம் நடந்த தினத்தன்று ஃபார் ஈஸ்ட் கிளாஸ் தள்ளுவண்டி கடையை அவர் பார்த்தார். அங்கு 7 Earphones கள் மற்றும் ஒரு ஸ்மார்ட் வாட்ச்சையும் திருடினார். இந்த திருட்டு சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

வீடுகளில் புகுந்து பொருட்களை திருடும் குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.அல்லது அபராதம் விதிக்கப்படும்.அல்லது இவ்விரண்டுமே வழங்கப்படலாம்
.மேலும் முறை கேட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கப்படலாம்.அல்லது 5000$ அபராதம் விதிக்கப்படலாம்.அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.