சிங்கப்பூரில் தற்காலிகமாக மூடப்பட உள்ள பூங்கா!! தெரிந்து கொள்ளுங்கள்!!

சிங்கப்பூரில் தற்காலிகமாக மூடப்பட உள்ள பூங்கா!! தெரிந்து கொள்ளுங்கள்!!

சிங்கப்பூரில் TELOK BLANGAH HILL பகுதியில் உள்ள TELOK BLANGAH பூங்காவின் சில பகுதிகள் பழுதுபார்க்கும் பணிக்காக தற்காலிகமாக மூடப்படும்.

இந்த தகவலை தேசிய பூங்கா கழகம் தெரிவித்துள்ளது.

பூங்காவின் ”FOREST WALK, EARTH TRAIL” பாதைகள் 2026-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை பழுதுபார்க்கும் பணிக்காக மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.

“FOREST WALK” பாதை கடந்த 2023-ஆம் ஆண்டு விடாமல் பெய்த கனமழையால் சேதமடைந்தது. அதனை சரி செய்யும் வகையில் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவித்துள்ளது.

அந்த பாதைகள் பழுதுபார்க்கும் பணிகள் நிறைவடையும் வரை பூங்காக்கு வரும் பார்வையாளர்கள் TELOK BLANGAH HILL இல் இருக்கும் மற்ற பாதைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியது.

பூங்காக்கள் மற்றும் காடுகளுக்கு செல்லும் மக்கள் கனமழையின் போதும் அதன்பிறகும் செல்வதை தவிர்க்குமாறு கழகம் அறிவுறுத்தியது.