புக்கெட் நகரின் விமான நிலையத்தில் இடம்பெற்ற சிங்கப்பூர் கட்டிடக்கலையின் ஓவியம்…!!!

புக்கெட் நகரின் விமான நிலையத்தில் இடம்பெற்ற சிங்கப்பூர் கட்டிடக்கலையின் ஓவியம்...!!!

தாய்லாந்தின் புக்கெட் நகரின் விமான நிலையத்தில் சிங்கப்பூர் கட்டிடக்கலையின்
சுவரோவியம் இடம் பெற்றதற்காக அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

சிங்கப்பூரின் ஜூ சியெட் பகுதியில் காணப்படும் பெரனாக்கான் எனும் தரை வீடுகள் அந்த சுவர் ஓவியத்தில் வரையப்பட்டிருந்தது.

சுவரோவியத்தின் படத்தை சமூக ஊடகங்களில் E Jeejum என்பவர் பதிவேற்றியுள்ளார்.

அதில் அவர் வேறு நாட்டின் படத்தை பயன்படுத்தியது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

இந்தப் பதிவைப் பார்த்த பல நெட்டிசன்கள், சுவரோவியத்தில் உள்ளூர் காட்சியை ஏன் பயன்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சுவரோவியத்தில் வெளிநாட்டுக் காட்சி இருப்பது விமான நிலைய அதிகாரிகளுக்குத் தெரியுமா என்றும் சிலர் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த நிர்வாகம், சுவரோவியத்தில் உள்ள கட்டிடக்கலையை புக்கெட்டிலும் காணலாம் என்பதைத் தெரிவிக்க விரும்பியதாக கூறியது.

மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதற்காக நிர்வாகம் மன்னிப்பு கேட்டதுடன் சுவரோவியம் மாற்றியமைக்கப்படுவதாக தெரிவித்தது.