தாய்லாந்தில் புதிய வகை mpox தொற்று!!

தாய்லாந்தில் புதிய வகை mpox தொற்று!!

தாய்லாந்தில் முதல் புதிய வகை mpox தொற்று பதிவாகியுள்ளது. அந்த நபர் ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து தாய்லாந்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

தாய்லாந்திற்கு 66 வயதுடைய ஐரோப்பியர் இந்த மாதம் 14-ஆம் தேதி சென்றார்.

அவருக்கு புதிய வகை தொற்றான mpox clade 1b இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஆசியாவிலேயே முதன்முதலாக தாய்லாந்து தான் mpox இன் புதிய வகை நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.

இது மனிதர்கள் இடையே பரவக்கூடிய நோய்.

இந்த புதிய வகையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

இந்த புதிய வகை mpox நோய் தொற்று சம்பவங்களும்,இறப்புகளும் இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் காங்கோ, புருண்டி,கென்யா,ருவாண்டா உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்துள்ளன.

Follow us on : click here ⬇️