புதிய ரக கோவிட்-19 கிருமி பரவல்…..புதிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?

அமெரிக்கா தொற்று நோய் தடுப்பு நிலையமும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து புதிய வகை கிருமியான BA.2.86 கிருமியை கண்காணித்து வருவதாக தெரிவித்தன.

தற்போது புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது.

Moderna,Pfizer நிறுவனங்கள் அதன் புதுப்பிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் புதிய ரக BA.2.86 கோவிட் கிருமிக்கு எதிராக செயல்பட கூடிய ஆற்றலை உடையது என்று தெரிவித்தது.Moderna வின் தடுப்பு மருந்து புதிய வகை கிருமியை எதிர்ப்பதற்கு 8.7 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. Pfizer புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசியில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும் தெரிவித்தது.

சுவிட்சர்லாந்து, தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல், டென்மார்க்,பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் புதிய ரக கிருமி வகை கண்டுபிடிக்க பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.