சிங்கப்பூரில் நேற்று நவம்பர் 19 அன்று Tampines,தெரு 11 இல் சிங்கப்பூரின் முதல் நகர்புற கொள்கலன் வடிவிலான மீன் பண்ணை ஒன்று சமூக மற்றும் குடும்ப நல மேம்பாட்டு அமைச்சரும், Tampines GRC இன் அறிவிப்பாளர் அமைச்சருமான Mr Masagos அவர்களின் முன்னிலையில் திறக்கப்பட்டு உள்ளது.
மேலும் இது Tampines சுற்று சந்தை மற்றும் உணவு மையத்திற்கு அருகாமையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. Tampines ன் மீன் வியாபாரிகள் , வணிகர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் இந்த திட்டத்தை பெரிதும் வரவேற்கின்றனர். இந்த திட்டத்தின் வாயிலாக , தொடங்கப்பட்ட மாதத்தில் இருந்து அடுத்த 6 மாதத்திற்குள் குறைந்தது 500 கிராமில் இருந்து 600 கிராம் வரை நன்கு வளரப்பட்ட மிகவும் சுவையான Jade Perch போன்ற சுவையான மீன்களை மக்கள் பெற இயலும்.
மேலும் இந்த மீன்களை உள்ளூர் வியாபாரிகளிடம் இருந்தே மக்கள் பெரும் வகையில் இத் திட்டமானது செயல்படுத்தப்படும்.
மேலும் இதன் மூலம் உள்ளூர் வியாபாரிகள் கிலோ ஒன்றிற்கு $38 வீதம் லாபம் பெற இயலும்.
Jade Perch மீன்கள் மட்டுமின்றி மேலும் 5 வகை மீன்களையும் இந்த கொள்கலன் மீன் பண்ணையில் வளர்க்க போவதாக இந்த மீன்பண்ணையின் பங்குதாரர்களான Aqualita Ecotechnology மற்றும் Tampines Town council கூறியுள்ளது.
மேலும் இந்த கொள்கலன் Aqualita நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த அமைப்பாளர்கள் தொடர்ந்து மீனின் வளர்ச்சி , ஆரோக்கியம் முதலியவற்றிக்கு தேவையான உணவு போன்றவற்றை கண்காணித்து வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த திட்டமானது குறுகிய பரப்பளவில் அதிக மகசூலை தரக்கூடிய ஒன்றாகவும் கருதப்படுகிறது.
இது போன்ற கொள்கலன் மீன் பண்ணைகளை மேலும் சில இடங்களில் அமைத்து , வேலைவாய்ப்புகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகளின் தரத்தை மேம்படுத்த போவதக கூறப்படுகிறது.