கடன் தொல்லையால் சிக்கி தவிப்பர்களுக்கு சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்!!
சிங்கப்பூரில் கடன் தொல்லையால் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவ புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.ஈராண்டு முன்னோட்டத் திட்டத்தை Credit Counselling Singapore அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.
குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு முதலில் உதவி வழங்கப்படும்.
கடன் சிக்கலில் உள்ளவர்களுக்கு தற்போது பெரும்பாலும் பயிற்சி கூட்டங்களை Credit Counselling Singapore அமைப்பு ஏற்பாடு செய்கிறது.
கடனைச் சமாளிக்க முடியாமல் சுமார் 1150 பேர் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அந்த அமைப்பின் உதவியை அணுகியுள்ளனர்.
கடந்தை ஆண்டை விட அது 18 சதவீதம் அதிகம். இந்த புதிய திட்டத்தின்கீழ் கடன்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவ ஒரு நிதி பயிற்சியாளர் நியமிக்கப்படுவார்.
வருமானத்தை அதிகரித்து ,செலவைக் குறைக்க ஒவ்வொரு மாதமும் கடனை எவ்வாறு சமாளிப்பது என்பதை அவர் கற்றுக்கொடுப்பார்.
இந்த ஆண்டு Credit Counselling Singapore அதன் 20-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg