கடைப்பகுதிகள் என்றாலே சில சமயங்களில் கூட்ட நெரிசலும்,அதிகப்படியான இரைச்சலாகவும் இருக்கும்.
அதனால்,தேவைப்படுகிற பொருளை வாங்குவது சிறப்பு கவனம் தேவைப்படுபவர்களுக்கு மிக கடினமாக இருக்கும்.
அதைப் புரிந்து கொண்டு அதற்காக ஓர் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வார நாட்களில் திங்கள்,செவ்வாய் போன்ற நாட்களில் தான் கடைப்பகுதிகள் பொதுவாக அமைதியாக காணப்படும்.
விரைவில் இது நீட்டிக்கப்பட உள்ளது.
வாடிக்கையாளர் பற்றாக்குறை நீட்டிப்புக்கு காரணம் அல்ல.
சிறப்பு தேவையுள்ள வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்ற அந்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
அவர்களுக்காக குறிப்பிட்ட நேரங்களில் இதுபோன்ற அமைதியான பகுதிகள் ஒதுக்கப்படவிருக்கின்றன.
முதுமை மறதி நோயால் பாதிக்கப்பட்டோரும், தொடர்புத் திறன் குறைபாடு இருப்போரும் கடைகளில் பொருள் வாங்கும் அனுபவத்தை அளிப்பதற்காக இந்த திட்டம் கொண்டு வர உள்ளது.
இந்த புதிய திட்டம் Frasers நிறுவனத்தின்கீழ் செயல்படும் 13 கடைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும்.
அதோடு,கடைப்பகுதிகளில் சில கடைகள் முதுமை காரணமாக மறதி நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் மையமாகவும் சேவையாற்றும்.
`Paint It Forward´ எனும் திட்டத்தின்மூலம் கோ சோக் தோங் Enable நிதி திட்டத்திற்கு நிதி வழங்கி உதவ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பங்கேற்பாளர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் வரைந்த வர்ணங்கள் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு நபருக்கும் 10 வெள்ளி நிதியை நிறுவனம் கோ சோக் தோங் Enable நிதி திட்டத்திற்கு கொடுக்கும்.