Latest Tamil News Online

சிங்கப்பூரில் அறிமுகமாக உள்ள புதிய விதிமுறை!

சிங்கப்பூரில் டிசம்பர் 30 – ஆம் தேதி புதிய நடைமுறை ஒன்று அறிமுகம் காண உள்ளது.புதிதாக தயாரிக்கப்படும் பானங்களில் அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் குறித்து லேபிள்கள் ஒட்டப்பட்ட வேண்டும்.

ஏற்கனவே பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கு லேபிள்கள் ஒட்டப்படும் முறை நடைமுறையில் உள்ளது.

அந்த புதிய நடைமுறை புதிதாக தயாரிக்கப்படும் காப்பி, Bubble tea , பழசாறுக்கும் பொருந்தும் .ஊட்டச்சத்துக்களை குறிக்கும் அளவுகள் விற்பனைக்கு செல்லும் பானங்களில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அதில் கூடுதலாக சேர்க்கப்படும் பொருட்களின் அளவையும் ,அதில் சேர்க்கக்கூடிய Toppings யின் சர்க்கரை அளவும் கட்டாயமாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.பானங்கள் “A ” மற்றும் “D ” என்று வகைப்படுத்தப்படும்.

இந்த புதிய விதிமுறை ஹோட்டல்கள் , பள்ளிகள் ,குழந்தைகள் பரிமாரிப்பு,சுகாதார பராமரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அது பொருந்தும் .”D ” என வகைப்படுத்தப்பட்ட பானங்களுக்கு விளம்பரம் செய்ய அனுமதி கிடையாது.

இத்தகைய முயற்சிகள் நீரிழிவு நோய்க்கு எதிராக எடுக்கப்படுகிறது.