இத்தாலியின் மிலான் நகரில் இவ்வாண்டு முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறை!! மீறினால் அபராதம்!!

இத்தாலியின் மிலான் நகரில் இவ்வாண்டு முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறை!! மீறினால் அபராதம்!!

இத்தாலியின் மிலான் நகரில் நேற்று (ஜனவரி 1) பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

2020 இல்,மிலானில் காற்றின் தரம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டம் புகைபிடிப்பதற்கு எதிரான கடுமையான தடைகளை படிப்படியாக அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது.

2021ஆம் ஆண்டு பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் புகைப்பிடிக்க தடைசெய்யப்பட்டது.

2025 ஆம் ஆண்டு பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தெருக்களிலும், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலும் புகை பிடிக்கக் கூடாது.

விதிகளை மீறுபவர்களுக்கு 40 யூரோக்கள் முதல் 240 யூரோக்கள் (சுமார் 56 வெள்ளி முதல் 340 வெள்ளி வரை) வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்தத் தடைவிதிப்புக்கு எதிராக சிலர் குரல் எழுப்பினர்.

வெளியில் புகைபிடிக்க வேண்டாம் என்று சொல்வது ஒருவரின் சுதந்திரத்தைப் பறிப்பது போன்றச் செயல் என்று சிலர் கூறினர்.

புகைபிடித்தல் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதால் தடையை ஆதரிப்பதாகச் சிலர் கூறினர்.

நகரின் காற்றின் தரம் மற்றும் குடிமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.