இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ பண பரிவர்த்தனை முறையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவங்கி வைப்பார்.
நாட்டில் யு.பி.ஐ பண பரிவர்த்தனை முறை வெற்றிகரமாக அதன் சேவையைச் செய்து வருகிறது. எளிதான முறையில் பணம் செலுத்துவதற்கும், பெறுவதற்கும் மத்திய அரசு இந்த யு.பி.ஐ முறையை அறிமுகப்படுத்தியது.
தற்போது வெற்றிகரமான சேவை அமைப்பாக உருவெடுத்துள்ளது.
இந்த சேவை அமைப்பை என்.பி.சி.ஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற ஒழுங்குபடுத்தும் அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது.
ஒரே செயலி மூலம் பல்வேறு வங்கிக் கணக்குகள் பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்த முடிவதால் இந்த அமைப்பை பெரிதும் வரவேற்கின்றனர்.
குறிப்பாக இன்றைய இளைய தலைமுறைகளிடம் யு.பி.ஐ முறை வெற்றிகரமாக சென்று அடைந்தது மட்டுமல்லாமல் அவர்கள் பெரிதும் வரவேற்கப்பட்ட சேவை அமைப்பாக மாறி உள்ளது.
இந்நிலையில் இந்தியா-சிங்கப்பூர் இடையே யு.பி.ஐ பண பரிவர்த்தனை முறை திட்டம் துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று இந்த திட்டம் அறிமுகமாக உள்ளது.
இதனை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்கிறார். இதில் சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong பங்கேற்க உள்ளார்.