Singapore news

சிங்கப்பூரில் வரும் ஜூலை மாதம் அறிமுகமாக உள்ள புதிய திட்டம்!

சிங்கப்பூரின் சுகாதார பராமரிப்பு துறையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய விருக்கிறது.அது சிறப்பாக செயல்பட தொடங்கி உள்ளதாக சுகாதார அமைச்சர் Ong Ye Kung கூறினார்.

அந்த புதிய உத்தி Healthier SG திட்டமாகும். இதுவரை அதில் 24,000 க்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.

Healthier SG திட்டம் என்பது 40 வயதை தொட்டவர்கள் குடும்ப மருத்துவரை நியமிக்குமாறு வலியுறுத்துகிறது.

அந்த திட்டம் வரும் ஜூலை 5-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கவிருக்கிறது

எதிர்பார்த்ததை விட அந்தத் திட்டத்திற்கு அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.

Fullerton Health இன் புதிய சுகாதாரப் பரிசோதனை நிலையத்தைத் தொடங்கி வைத்தார். அப்பொழுது Healthier SG திட்டத்தைப் பற்றி பேசினார்.

Healthier SG எனும் “ ஆரோக்கியமான சிங்கைத்´´ திட்டத்தில் மே மாதம்,சமூக,சுகாதார உதவி திட்டத்தை வழங்கும் 1200 மருந்தகங்களில் 870 க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் சேர்ந்துள்ளதாக கூறினார்.

Fullerton Health நிறுவனத்தின் புதிய சுகாதார நிலையம் மக்கள் சென்று வருவதற்கு சிறந்த இடத்தில் அமைந்துள்ளது.அங்கு பல வசதிகளும் உள்ளன என்றும் கூறினார்.