சிங்கப்பூரில் சிறையில் இருந்து வெளியே வருபவர்கள் மறுபடியும் சமூகத்தில் இணையும் நடவடிக்கை தீவிர படுத்தப்படுகிறது.
மொத்தம் 53 அமைப்புகள் அதற்கு கை கொடுக்கின்றன.
சிறையிலிருந்து விடுதலை அடைபவர்கள் குற்றச் செயலில் மறுபடி ஈடுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது மற்றும் அவர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை பின்பற்ற உதவுவதும் திட்டத்தின் நோக்கம்.
சிறையிலிருந்து வெளியே வருபவர்கள் தங்கள் அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
குற்றச் செயல்களை தடுப்பதை அவர்கள் கை கொடுக்கலாம் என்று உள்துறை மூத்த துணை அமைச்சர் கூறினார்.