
தேசிய சுற்றுப்புற அமைப்பும், சிங்கப்பூர் உணவு அமைப்பும் ஜூன் 7-ஆம் தேதி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. தட்டுகளைத் திரும்ப வைக்காத வாடிக்கையாளர்களுக்கு ஒரே வாரத்தில் 73 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டது.
இம்மாதம் முதல் தேதி புதிய நடவடிக்கை அமலுக்கு வந்தது. வாடிக்கையாளர்கள் தட்டுகளை திரும்ப வைப்பதை உறுதி செய்வதற்காக கொண்டுவரப்பட்டது.
கடந்த வாரத்தில் 120 காப்பிக் கடைகளிலும்,95 உணவங்காடி நிலையங்களிலும் தினமும் சோதனை நடத்தப்பட்டது.
அனைவரும் முதல்முறையாக தவறு செய்ததால் யாருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை.
வாடிக்கையாளர்களிடம்,“மேசைகளில் குப்பைகளை விட்டு செல்ல வேண்டாம் ´´ என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேசையைத் துப்புரவாளர்கள் துடைப்பார்கள் என்றாலும், வாடிக்கையாளர்கள் மேசையைச் சுத்தமாக வைத்து கொள்வது சிறப்பு என்றும் அதிகாரிகள் கூறினர்.