மலேசியாவின் குடிநுழைவு துறை புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.டிசம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது. அதனை அதிகார பூர்வ தகவல்களை அதன் இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளது.வெளிநாட்டவர்கள் மலேசியாவுக்குள் நுழைவதற்கு முன் E- Arrival அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்த புதிய கட்டுப்பாட்டில் ஒரு சிலருக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை குடிநுழைவு சோதனையின்றி சிங்கப்பூர் வழியாக மலேசியாவுக்கு செல்லும் வெளிநாட்டிவர்களுக்கு பொருந்தாது என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும்,மலேசியா நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் என்ட்ரியில் நுழைய தகுதியுடைவர்களுக்கு E-Arrival அட்டை அவசியம் இல்லை என்றும் தெரிவித்தது.
சமீபத்தில் விசா இல்லாத பயண திட்டத்தை மலேசியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.