சிங்கப்பூர் முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களிலும், நூலகங்களிலும் ATM மாதிரி இயந்திரம் காட்சிக்கு வைக்கப்படும்.
சிறுவர்களுக்கு இளம்வயதிலேயே நிதி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புது முயற்சியில் வங்கிகள் ஈடுபட உள்ளன.
அதற்கு மேலும் அதிகமான வங்கிகள் முன் வருகின்றன.
சிறுவர்களுக்கு நிதி தொடர்பான தலைப்புகளை கற்றுக் கொடுப்பதற்காக ATM இயந்திரம் போன்ற கருவியை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 400,000 ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
POSB வங்கியும், உள்ளூர் கல்வி நிறுவனங்களும் இணைந்து ATM மாதிரி இயந்திரங்களை உருவாக்கியுள்ளன.
POSB வங்கி குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவ, சமூக நல அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது.