சிங்கப்பூரில் மாணவர்கள் பொது மேடைப் பேச்சில் நடவடிக்கைகளில் கலந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக புதிய நடவடிக்கைகளைக் கல்வி அமைச்சகம் கொண்டு வர உள்ளது.
இதற்காக உயர்நிலைப் பள்ளிகள் மாணவர்களைத் தயார்படுத்துவதற்காக புதிய நடவடிக்கை ஏற்பாடு செய்யவிருக்கின்றன
அதேபோல்,சாதாரண நிலை ஏட்டுக் கல்வி தேர்விலும்,பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்விலும் மாற்றங்கள் வருகிறது.
இந்த புதிய நடவடிக்கை ஆங்கில வாய்மொழித் தேர்வில் மாணவர்கள் செய்யும் மாற்றங்களுக்கு ஏற்ப இது அமைக்கப்பட்டுள்ளது.
புதிய நடவடிக்கை Planed Response என்று அழைக்கப்படும்.இதற்குமுன் Read Aloud பகுதி என்று இருந்தது. தற்போது அது மாற்றப்பட்டுள்ளது.
பத்து நிமிட காணொளியைப் பார்த்து மாணவர்கள் அவர்களுடைய கருத்துக்களை உருவாக்க வேண்டும்.
அதன்பின் அவர்கள் 10 நிமிடம் பேச வேண்டும்.அவர்கள் அவர்களுடைய கருத்துகளைத் தெளிவாக கூறுவது,சரளமாக பேசுவது உள்ளிட்ட அம்சங்களில் மாணவர்கள் ஆராயப்படுவர் என்று கல்வி அமைச்சகம் சொன்னது.