இயற்கை பேரிடர்களை சமாளிக்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி...!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மோசமான வானிலையை சமாளிக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஒரு சில நிறுவனங்கள் அவசரகால வெளியேற்ற பயிற்சிகளை முடுக்கிவிட்டுள்ளன.
முன்பு இதுபோன்ற பயிற்சிகள் 6 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்டன.
இப்போது அவை வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை செய்யப்படுகிறது.
மோசமான வானிலையை முன்கூட்டியே கண்டறியக்கூடிய புதிய தொழில்நுட்பங்களை நாடுவதாகவும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய சுற்றுச்சூழல் அமைப்பின் myENV பயன்பாடு அடிக்கடி கண்காணிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் குத்தகைதாரர்கள் சங்கம் பலத்த காற்று மற்றும் மழை பற்றிய உடனடி தகவல்களை கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்குகிறது.
இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஆபத்துக் காலங்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கலாம்.
Follow us on : click here