சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் ஓர் புதிய அம்சம்!!மறக்காமல் படியுங்கள்!!

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் , பயணிகளின் லக்கேஜ்களை சோதனை செய்ய புதிய AI செயற்கை நுண்ணறிவு அம்சத்தை கொண்டுவந்துள்ளது சாங்கி ஏர்போர்ட் குரூப் ( CAG) . இதன் மூலம் பயணிகளின் லக்கேஜ் , எக்ஸ் – ரே இயந்திரங்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு அதன் பட விளக்கம் AI நுண்ணறிவின் உதவியால் திரையிடப்படும்.

இதனால் ஏதேனும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் லக்கேஜ்களில் இருக்கும் பட்சத்தில் திரையில் சிவப்பு நிற கோடுகளுடன் கொண்ட அடையாளம் காணப்படும்.

இந்த அம்சமானது விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது CAG அமைப்பானது டெர்மினல் 3 ஐ சோதனையிட்டு வரும் நிலையில் இதே போன்ற தானியங்கி திரையிடலை அனைத்து டெர்மினல் பாதுகாப்பு சோதனைகளிலும் பொருத்த முடிவெடுத்து உள்ளதாக கூறியுள்ளது.

இவ்வாறு செய்வதின் மூலம் தடைசெய்யப்பட்ட பொருட்களை மிக விரைவாகவும் எளிதாகவும் கண்டறியலாம். மேலும் இதனால் சோதனையில் ஏற்படும் காலதாமதத்தை குறைக்கலாம்.

பாதுகாப்பு ஸ்க்ரீனிங் முறைக்கு அதிக எண்ணிக்கையிலான ஆட்கள் தேவையாக உள்ளது.ஆனால் AI திரையிடலை நடைமுறை படுத்துவதின் மூலம் இத்தகைய பணி ஆcட்கள் தேவையை குறைத்து விமான நிலையத்தின் வேறு சில முக்கிய வேலைகளில் ஈடுபட செய்யலாம் எனவும் கூறியுள்ளது.