இப்போது மின்சார கட்டணம் 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று மாதங்களுக்கு SP குழுமத்தின் மின்சார கட்டணம் சராசரியாக 1.2 விழுக்காடு உயர்கிறது.
கடந்த காலாண்டில் அதற்கு முந்தைய காலண்டை விட எரிசக்தி விலை உயர்ந்துள்ளதாக சொல்லப்பட்டது.
27.74 காசு பொருள் சேவை வரி சேர்க்காமல் மணிக்கு ஒரு கிலோவாட் மின்சாரத்துக்கு வசூலிக்கப்படுகிறது.
Gas கட்டணமும் அதிகரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வீடுகளுக்கான எரிவாயு ஒரு கிலோவாட்டுக்கு 0.23 காசு உயரும் என எரிசக்தி நிறுவனமான City Energy தெரிவித்துள்ளது.
தற்போது ஒரு கிலோவாட்டுக்கு 21.68 காசு வசூலிக்கப்படுகிறது.
இனி, அது 21.91 காசுக்கு அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கட்டண உயர்வு நடைமுறையில் இருக்கும்.
எரிபொருளின் விலை அதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிட்டால் அது அதிகரித்திருப்பதாக எரிசக்தி நிறுவனமான City Energy குறிப்பிட்டுள்ளது.