சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட்டில் ஓர் புதிய மாற்றம்……. எப்போது நடைமுறைக்கு வரும்?….

சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

இனி,முதலாளிகள் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடத்திற்கான ஆதார சான்றினை முதலில் சமர்ப்பிக்க வேண்டும்.இதனை அவர்களை சிங்கப்பூருக்குள் வரவழைப்பதற்குமுன் சமர்ப்பிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.இல்லையென்றால், அவர்களின் வேலை அனுமதிக்கு கிடைக்க கூடிய சலுகைகள் ரத்து செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

இது புதிய வேலை அனுமதி அட்டையின்கீழ் சிங்கப்பூர் வர உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு பொருந்தும்.முதலாளிகள் அவர்களின் தங்குமிடத்திற்கான ஆதார சான்றினை சமர்ப்பிக்க வேண்டும். இது மலேசியர்களுக்கு பொருந்தாது.

இது ஒர்க் பெர்மிட் மூலம் வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கானது.

இந்த புதிய மாற்றம் செப்டம்பர் 19-ஆம் தேதி(இம்மாதம்) முதல் நடைமுறைக்கு வரும்.

இது கட்டுமானம், கப்பல் பட்டறை, பெட்ரோல்-ரசாயன ஆகிய துறைகளுக்கு பொருந்தும்.

தற்போது சிங்கப்பூரில் வேலை அனுமதி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதனால் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி நிரம்பி வருகிறது.

பலரை விடுதிகளில் தங்க வைக்க முடியாமல் வேறு இடங்களில் தங்க வைக்கின்ற நிலை ஏற்படுகிறது.