சிங்கப்பூர் ஊழியர்களுக்காக புதிய உருமாற்று திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.ஊழியர்களுக்காக பயிற்சித் திட்டம் வழங்கப்படும். அந்த பயிற்சி திட்டமானது நிறுவனங்களின் தேவைக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும்.
இதற்காக முதலாளிகளுடன் தொழிற்சங்கங்களும் இணைந்து பங்காற்ற வேண்டியிருக்கிறது. இதனை உறுதி செய்யும் வகையில் உருமாற்றத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பயிற்சித் திட்டம் முழு நேர வேலை பார்ப்பவர்களுக்கு எளிதாக கிடைக்க வேண்டும். இதில் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தன. மேலும் சிறந்த முறையில் பயிற்சி அளிப்பதற்கு மின்னிலக்க வளங்கள் பயன்படுத்தப்படும்.
பயிற்சி திட்டம் மூலம் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்றுவிப்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் கிடைக்க 6 முதல் 9 மாதம் வரை ஆகும்.ஆனால், இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.தற்போது அவர்கள் 3 மாதத்தில் சான்றிதழைப் பெறலாம்.