சிங்கப்பூரில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான அனுமதி சேர்ப்பில் புதிய மாற்றம்!

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் உயர்நிலைப் பள்ளிக்கான அனுமதியில் வரப் போகின்ற மாற்றங்களைக் குறித்த விவரங்களை அறிவித்தார்.

அடுத்த 2023-ஆம் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் மூன்று பிரிவுகளாக செல்வர் என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.இந்த மூன்று பிரிவுகளும் தற்போது இருக்கும் விரைவு நிலை,வழக்க நிலை, தொழிற்கல்வி போன்றவற்றைப் போல அமைக்கப்படும்.

மாணவர்கள் பள்ளி சேர்க்கை குறித்தும், பாட நிலைகளை தேர்ந்தெடுப்பதற்கும் இந்தப் பிரிவுகள் வழி வகுத்துத் தரும் என்று கூறினார்.

பள்ளிகளில் பலதரப்பட்ட திறன்களை கொண்ட மாணவர்களைச் சேர்ப்பதற்கும், அவர்கள் தொடர்ந்து பல பள்ளிகளில் சேர்வதற்கு வாய்ப்பு அளிப்பதற்காக இந்த புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் வெவ்வேறு பாடங்களை வெவ்வேறு நிலைகளில் ஒரே வகுப்பில் உள்ள மாணவர்கள் பயில முடியும் என்றும் கூறினார்.

சிங்கப்பூரில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் SEC எனும் சிங்கப்பூர்-Cambridge உயர்நிலை பள்ளி சான்றிதழ் தேர்வை எழுதுவார்கள்.

இத்தேர்வை 2027-ஆம் ஆண்டிலிருந்து எழுதுவர்.120 பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் புதிய பாட அடிப்படையிலான வகைப்பாட்டு முறை செயல்முறைக்கு கொண்டு வரப்படும்.