சிங்கப்பூரில் பொது போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் வர உள்ளது.
கடந்த ஆண்டில் பேருந்துகள், ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதைவிட இந்த ஆண்டு இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.இதனை பொதுப்போக்குவரத்து மன்றம் செப்டம்பர் 18-ஆம் தேதி (நேற்று) அறிவித்தது.
இந்த புதிய மாற்றம் டிசம்பர் 23-ஆம் தேதி நடைமுறைக்கு வரும்.
காசுகளில் செலுத்தும் பெரியவர்கள் இனி பஸ் கட்டணத்தில் கூடுதலாக 20 காசுகள் செலுத்த வேண்டும் என்று கூறியது.
அதோடு 4.2 கி.மீ வரையிலான பயண கட்டணம் 10 காசு உயரும். அதற்குமேல் செல்லும் பயணங்களுக்கு 11 காசு அதிகரிக்கும்.
பேருந்து பயணத்திற்கான சலுகை ரொக்க கட்டணம் 10 காசுகள் உயரும்.
இதுவரை இல்லாத அளவில் மிக அதிகமான கட்டண உயர்வு என்று கூறியது.
Monthly travel card பயன்படுத்தும் பெரியவர்களுக்கு கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.
முதியோர்கள், மாணவர்கள், குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்கள், உடல் ஊனமுற்றோர் பயணத்தின் தூரத்தைப் பொறுத்து கூடுதலாக 4 முதல் 5 காசு வரை செலுத்த வேண்டும்.