Singapore news

சிங்கப்பூரில் நேற்று நடைமுறைக்கு வந்த புதிய மாற்றம்!

சிங்கப்பூர் விரைவுச்சாலையில் (PIE) உள்ள நுழைவாயில் மாற்றப்படும் என்று அறிவித்திருந்தது.

நேற்று (மே-28) விரைவுச்சாலையின் இடப்பக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

அது வலப்பக்கத்தில் அமைந்திருந்தது.

வாகனம் ஓட்டுபவர்கள் Duneran Road, Clementi Road ஆகிய சாலைகளை நோக்கி திரும்பலாம்.

இந்த புதிய மாற்றுப்பாதையின் வழி மூலமாக அதே சாலைகளுக்கு செல்லலாம்.

Rifle Range சுரங்கப்பாதை புதிய நுழைவாயிலில் அமைந்திருக்கும்.

இந்த இடமாற்றம் குறித்து வாகனமோட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

வலப்பக்கம் அமைந்துள்ள நுழைவாயில் மூடப்படும்.

தற்போதுள்ள ஹீவா குவான் அவென்யூ சாலை இரு வழிச் சாலையாக மாற்றப்படும் என்று சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.